Skip to main content

Bioscope

TITLE OF SIVAKARTHIKEYAN AND SAMANTHA'S NEXT IS HERE


Ponram - Sivakarthikeyan project's working title on the sets is Seemaraja

Sivakarthikeyan's Velaikkaran has been certified with a U Certificate and has been announced officially that the film will release for the big Christmas weekend (Dec 22). Sivakarthikeyan is already shooting his next movie with Director Ponram project with Simran, Samantha, Soori, and many others. D.Imman scores the music and the cinematography is handled by Bala Subramaniam.

Now, our sources suggest that the working title of the film is Seemaraja. This title is said to be referred to the project in the shooting sets, but it is not confirmed, if this will be their official title for the film. After two hits in Varuthapadatha Vaalibar Sangam and Rajni Murugan, Director Ponram and Sivakarthikeyan are uniting for the third time, and the First look of the film is slated to release on February 17, next year on Sivakarthikeyan's birthday.


NEW ANNOUNCEMENT FROM SIVAKARTHIKEYAN’S VELAIKKARAN
Sivakarthikeyan and Anirudh’s Ezhu Velaikkara lyric video to release tomorrow (December 6, 2017) at 6pm.
Sivakarthikeyan’s next film Velaikkaran directed by Mohan Raja has music by Anirudh Ravichander and the album has started to pick up popularity among the audience.

The latest announcement from the team is that, following the album, the lyric video of the song ‘Ezhu Velaikkara’ will be releasing tomorrow (December 6, 2017) at 6 pm. Stay tuned to catch this lyric video.

ரஜினியின் 2.0 படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை- படக்குழுவை ஏமாற்றிய நிறுவனம்

ரஜினியின் நடிப்பில் அதிக தொகையில் தயாராகி வரும் படம் 2.0. எப்படிபட்ட பிரம்மாண்டம் என்பதை நாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பார்த்தாலே தெரியும்.
இந்த படத்தில் பாதி காட்சிகள் VFX தான் என்பது நமக்கு தெரியும். அந்த காட்சிகளுக்கான வேலையை தயாரிப்பு குழு அமெரிக்காவில் உள்ள பிரபலமான VFX குழுவிடம் கொடுத்துள்ளனர்.
90% பணம் பெற்றுக் கொண்ட அந்த குழு இன்னும் படத்தின் 50% பட வேலையை கூட முடிக்கவில்லையாம். அவர்கள் ஏமாற்றியதால் தற்போது லைகா நிறுவனம் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதற்காக 24 மணிநேரமும் உழைத்து வருகிறார்களாம்.
அதோடு ஹாலிவுட்டில் இருக்கும் அந்த VFX குழு மீது லைகா நிறுவனம் புகார் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
அனுக்‌ஷாவுக்கு தொடர் சிகிச்சை! நடந்தது என்ன?
நடிகை அனுஷ்கா தற்போது பாஹமதி படத்தில் நடித்து வருகிறார். சைஸ் ஜீரோ படத்திற்காக உடல் எடை எடையை அதிகமாக கூட்டி பின் குறைக்க மிகவும் சிரமப்பட்டார்.
பாகுபலி படத்தில் கூட இதனால் அவரின் உடல் கிராஃபிக்ஸ் மூலம் மெலிந்த தோற்றத்தில் காட்டப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனாலும் தொடர்ந்து பின் தீவிர யோகாவில் இறங்கினார்.
இந்நிலையில் அவர் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளாராம். இதற்காக கேரளாவில் தற்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். இது அவரின் முடிவு இல்லையாம்.
அவரது நலன் விரும்பிகளின் அட்வைஸ் என சொல்லப்படுகிறது.

டேஷா... டேஷ் டேஷா... டேஷ் டேஷ் டேஷா...?! - ரிச்சி விமர்சனம்

 விகடன் விமர்சனக்குஉலகில் இருக்கும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்காகக் காத்திருக்கிறார்கள், அந்தக் காத்திருத்தல்தான் உலகை இயக்குகிறது. ரிச்சியில் யார் யாருக்காகக் காத்திருக்கிறார்கள், யாருடைய காத்திருப்பிற்குப் பலன் கிடைத்தது, யாருக்குப் பொய்த்துப்போகிறது என்பதை ஃபிளாஷ்பேக் பீரியட் திரைப்படமாகச் சொல்ல முயன்றிருக்கிறது ரிச்சி.
ரிச்சி
ஒரிஜினல் படமான ’உளிடவரு கண்டன்டே’ படத்தின் கதையையும் கதாபாத்திரங்களையும் இசையையும் மட்டும் எடுத்துக்கொண்டு புதிதாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால், அதுதான் படத்தின் பலவீனமாகவே மாறிவிட்டது. கதையை ஏகப்பட்ட பேர் சொல்வதால், நாம் பார்த்துக்கொண்டிருக்கிற கதை யாருடைய வெர்ஷன் என்பதில் குழப்பம் வருகிறது. அதோடு கதையும் போகுது...போகுது... போய்க்கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் படம் ஒன்றேமுக்கால் மணிநேரம்தான். ஆனாலும் பல மணிநேரங்கள் ஓடுகிற ஃபீல்.
`உளிடவரு கண்டன்டே’ படத்தின் சிறப்பே கர்நாடக மாநிலத்தின் கடற்கரை கிராமத்தின் கலாசாரத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்ததுதான். திரைமொழியிலும் பாத்திரங்களின் நடிப்பிலும் கன்னட சினிமாவின் பெஞ்ச் மார்க் சினிமாவாக அது மாறியிருந்தது. ஆனால், தமிழில் அனைத்தும் மிஸ்ஸிங். தூத்துக்குடி என்ற லேண்ட்ஸ்கேப்பைக்கூட `வாலே போலே' போன்ற சொற்களால் மட்டுமே உணர முடிகிறது.
ரிச்சி
கருப்புச் சட்டை, தாடி, போலீஸ் பெல்ட், துப்பாக்கி என அதட்டலாக படத்தில் புது லுக் கொடுத்திருக்கிறார் நிவின்.  ஆனால், அவருக்குப் பல இடங்களில் லிப்சின்க் இல்லாமல் இருப்பது. சில இடங்களில் அவர் வெற்றிலை குதப்ப, பின்னணியில் வாய்ஸ் கேட்பது, மலையாளம் கலந்து பேசுவது, தேவையில்லாத பில்டப்... என ரிச்சியை வெச்சி செய்திருக்கிறார்கள். அதுவும் நிவின் ஒரு டயலாக்கை பேசி முடிப்பதற்குள் ஓடிப்போய் பாப் கார்னே வாங்கிவந்துவிடலாம் (அப்போவும் முடிஞ்சுருக்காது என்பது வேறு விஷயம் ). அவ்வளவு இழுத்த்த்த்து பேசுகிறார்.
அலட்டல் இல்லாத எதிர்நாயகனாக நடித்திருக்கும் நிவின் பாலிக்கு முதல் பாதியில் மூன்று ஓப்பனிங் சீன்கள் வைத்திருக்கிறார்கள். ஒன்றில் ரஜினி,கமல், மம்முட்டி பாடலுக்குக் குத்தாட்டம்கூட போடுகிறார். முதல் பாதியில் ஆளாளுக்கு நிவின்பாலியின் கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லிச்சொல்லி பில்டப் ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், காட்சியாக எதுவுமே கன்வெர்ட் ஆகவில்லை! அதனாலேயே ரிச்சி மீது நமக்கு வரவேண்டிய ஈர்ப்பு வரவில்லை. ‘நேரம்’ படத்தின் மூலம் நிவின் பாலி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருந்தாலும் ‘ரிச்சி’தான் அவரது நேரடி தமிழ்ப்படம். ‘பிரேமம்’ படத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நிவினுக்கு இருக்கும் க்ரேஸை, இயக்குநர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. 
ரிச்சி
படத்தில் நிவின் பாலி கேரக்டரைத் தவிர ஷ்ரத்தா, நட்டி, குமரவேல், பிரகாஷ்ராஜ், ஆடுகளம்  முருகதாஸ், துளசி, லட்சுமி, விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, ரிச்சியின் பால்ய நண்பனாக வரும் ரகு, மதுரைப் பையனாக வரும் 'டெமோகரஸி' என நடித்தவர்களின் பட்டியல் நீளம். நட்டியின் பாத்திரமும் அதன் பின்னணியும் நன்றாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரகாஷ்ராஜ் ஒரே முகபாவனையோடு படம் முழுக்க ஆசீர்வாதம் பண்ணிக்கொண்டே இருக்கிறார். அவரை இன்னும் நன்றாகப் பயன்படுத்தி இருக்கலாம். சில காட்சிகளே வந்தாலும் குமரவேல் வழக்கம்போல் அபாரமாக நடித்திருக்கிறார். ‘லட்சுமி’ குறும்பட லட்சுமி பிரியாவுக்குப் பெரிய வாய்ப்புகள் இல்லை. கடலில் எது கிடைத்தாலும் தனக்குப் பாதி வேண்டும் என தாடிவைத்த டீசன்ட் வில்லனாக வருகிறார் ஜி.கே.ரெட்டி. 
விதவிதமான கதாபாத்திரங்களைப் பிடித்தவர்கள் அவர்களுக்கான பின்னணியை இன்னும் ஆழமாக உருவாக்கியிருக்கலாம். அதனாலேயே யாருடைய வேதனையும் மனதில் ஒட்டவில்லை. ஷ்ரத்தா துடிப்பான பத்திரிகையாளராக இரண்டு வசனங்கள் பேசுகிறார். மற்ற நேரங்களில் அவருடைய பின்னணி குரல் ஆங்காங்கே ஒலிக்கிறது. கடைசியில் கருத்துச்சொல்லி படத்தை முடிக்க உதவி இருக்கிறார். ரிச்சியின் நண்பன் ரகுவின் கதை ஏனோதானோ என்று படமாக்கப்பட்டிருப்பதால் அந்த கதாபாத்திரத்தின் மீது நமக்கு வரவேண்டிய பரிதாப உணர்ச்சியோ அல்லது அன்போ வரவில்லை. 
ரிச்சி
படத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் கதையும், அதில் சொல்லப்படும் பயம், நட்பு போன்ற விஷயங்களை வைத்தே கதையை நகர்த்தியிருப்பது; இயக்குநர்கள் கை ரிட்சி, டொரென்டினோ படங்கள் போல் படத்தில் வரும் ஆரம்பகட்ட ஃபிரேம்கள் ரசிக்க வைக்கின்றன. அதேபோல் படத்தின் கேமராமேன் பாண்டிகுமார் , எடிட்டர் அதுல் விஜய் நிறையவே பாராட்டப்படவேண்டியவர்கள். டெக்னிக்கலாக சிறப்பாகவே இருக்கிறது ரிச்சி.  ஆங்காங்கே வரும் சில க்யூட்டான வசனங்களில் ராஜ்மோகனும், இயக்குநர் கவுதமும் ஈர்க்கிறார்கள்.
மணப்பாடு என்கிற கிராமத்துப் பெயரை மட்டும்தான் காட்டுகிறார்கள். கடைசிவரை அந்த கிராமத்தையோ, அந்த மக்களையோ, அவர்கள் வாழ்க்கையையோ கொஞ்சம்கூட காட்டவில்லை. அதனாலேயே கதை நடக்கும் இடம் அந்நியமாகிவிடுகிறது. கதை நடக்கும் காலம், ஏன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்பதற்கும் காரணமே இல்லை. 
ஆரம்பத்தில் ரிச்சி யார் தெரியுமா? என வாய்ஸ் ஓவர் தருபவர்களில் ஒருவராய் வரும் குமரவேலை முதல் காட்சியிலேயே காட்டிவிட்டு, இறுதியில் அவருக்கு என்ன ஆச்சோ ஏன்று ஏற்படுத்த நினைத்த பதைபதைப்பு பார்வையாளனை கவர மறுக்கிறது. படத்தின் முக்கியத் திருப்பமாக நண்பனை நேருக்கு நேராக ரிச்சி சந்திக்கும் சீன் இருந்திருக்க வேண்டும். 'டேஷ் டேஷ் டேஷ் டெஷ் ' எனக் கதை சொல்லி கடுப்பேற்றி கடந்து போகிறார் நிவின் பாலி.
ரிச்சி
"`எந்தக் கதைக்கும் ஆரம்பமோ முடிவோ இல்ல. நாம எங்க நிப்பாட்டுறோமோ அங்கதான் முடிவுனு நெனச்சுக்குறோம்'- இந்த க்ளைமாக்ஸ் டயலாக் மாதிரிதான் படமும் எங்கே ஆரம்பிக்கிறது, யார் பார்வையில் கதை பயணமாகிறது என்ற தெளிவே இல்லாமல் போகிறது. 
ஆங்கிலம், மலையாளத்தமிழ் எனப் பேசும் நிவின் பாலிக்கு, அவர் எதிர்பார்த்த தமிழ் சினிமாவுக்கான சிவப்புக் கம்பள வரவேற்பு நிச்சயம் ‘ரிச்சி ' இல்லை.

ஹெச்.சி.எல். நிறுவன ஊழியர் செய்த உதவி: விபத்தில் உயிர் தப்பிய கெளதம் மேனன் உருக்கம்!


Gautam_dir


சென்னை, ராஜீவ்காந்தி சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
தமிழ் திரைப்படத் துறையில் இயக்குநராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் "மின்னலே', "வாரணம் ஆயிரம்', "காக்க...காக்க', "வேட்டையாடு விளையாடு', "நீதானே என் பொன்வசந்தம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
அவர் புதன்கிழமை நள்ளிரவு தனது விலை உயர்ந்த காரில் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்தார். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை பகுதியில், சாலை நடுவே திடீரென லாரி ஒன்று திரும்பியது. இதனால் நிலைத்தடுமாறிய கெளதம் வாசுதேவ் மேனின் கார் லாரி மீது மோதியது. இதில் கெளதம் மேனனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் கெளதம் மேனனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று திரும்பினார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து இயக்குநர் கெளதம் மேனன் ட்விட்டரில் கூறியதாவது
என் நலன் விரும்பிய, நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.



Comments

Popular posts from this blog

Bioscope

ANNOUNCEMENT FOR VIJAY FANS: 'VISUAL FEST BEGINS' After releasing 1-minute videos of all the 4 songs from Mersal, Sony Music has now decided to unveil the full track video footages today. Sony's latest tweet, "And the #MersalVisualFest begins! The much awaited #Mersal song videos are coming your way today. Get ready! @actorvijay @arrahman @Atlee_dir @ThenandalFilms." Rhevanth Charan, the Executive Director of Rohini Silver Screens has assured that there will be a grand celebration at his multiplex for Vijay's 25-year landmark. "Happy to announce #Thalapathy @actorvijay s 25 years mark along with #Mersal 50 will be celebrated grandly in ur very own @RohiniSilverScrExpect Big ! Experience Big ! #Fansfort" - Rhevanth HARISH KALYAN AND RAIZA’S FILM We had reported earlier that Bigg Boss fame Harish Kalyan and Raiza will be seen together in a film directed by Elan with music by Yuvan Shankar Raja.

Bioscope

தென்னிந்தியாவில் முதன்முறையாக திரிஷாவுக்கு மட்டும் கிடைத்த சர்வதேச கெளரவம் நடிகை திரிஷா 15 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜொலித்து வருகிறார். அது மட்டுமின்றி அவர் பெண்கள் முன்னேற்றம், விலங்குகள் நலம் பற்றிய சில அமைப்புகளிலும் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திரிஷாவுக்கு UNICEF அமைப்பு 'Celebrity Advocate" அந்தஸ்து கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளது. நாளை இந்த அமைப்பு சென்னையில் நடத்தவுள்ள குழந்தைகள் தின விழாவில் அவர் கலந்துகொள்ளவுள்ளார். தென்னிந்தியாவில் இந்த கெளரவத்தை பெறும் முதல் நடிகை திரிஷா தான் என்பதால் இதற்கு சமூகவலைத்தளங்களில் திரிஷாவுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது. Must Watch This Video HOT-NEWS Irumbu Thirai Movie Samantha Stills : Irumbu Thirai is an upcoming tamil movie starring Vishal, Arjun, Samantha. First Look of Irumbuthirai releasing on  Irumbu thirai Movie Cast and Crew  : Stars : Vishal, Samanta, Arjun and other

Bioscope

      WOW: AFTER PRIYANKA CHOPRA, THIS INDIAN GIRL    BECOMES THE NEW MISS WORLD! After 17 long years, India gets a new Miss World. Manushi Chhillar won the coveted Miss World beauty pageant for the year 2017. India's last Miss World winner was Priyanka Chopra who brought home the crown in the year 2000. Now after a long gap of 17 years, Manushi Chhillar has made the country proud. Around 108 women from across the world participated in the beauty pageant. Manushi Chhillar, the 20-year-old beauty queen is from Haryana. This is what she said to the media before the competition, "Though I was a medical student, I never had a plan B. I don't want to regret anything in life, so it was really important for me to win this competition. My aim has always been to win the Miss World title." 'WHAT IS THE POINT OF HAVING HER' Today, actress Priyanka Chopra is known as a top heroine in Bollywood and has forayed into Hollywood as well. She is someone w